கொரானா பரவலை தடுக்க வால்பாறை எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

கோவை: வால்பாறையில் கொரானா பரவலை தடுக்க நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை: வால்பாறையில் கொரானா பரவலை தடுக்க நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. கேரள மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில் கேரள மாநிலத்தினர் பலர் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான கேரள மாநிலத்தவர்கள் அடிக்கடி கேரளா சென்று வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் கொரானாவால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வால்பாறையில் சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வால்பாறையில் கொரானா வைரஸ் பரவலை தடுத்திட அரசின் அறிவுறுத்தலின் படி பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல, காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. 



மேலும், கேரள எல்லை சோதனை சாவடியான மழுக்கப்பாறை சோதனைச்சாவடியில் வனத்துறையினர், காவல்துறையினர், நகராட்சி பணியாளர்கள் சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். 



சோதனைச்சாவடியில் முகாம் அமைத்து, வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கப் படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.

இதே போல, அட்டகட்டி, ஆழியார் சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் மற்றும் பயணிகள் ஆய்விற்குப்பின் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு கணேஷ் தலைமையில் நோய் தடுப்பு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வால்பாறையிலுள்ள தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...