கொரோனா வைரஸ்: கேரளாவில் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ. 20,000 கோடி மாணியம் அறிவிப்பு - முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு

கேரளா: கேரளாவில், மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 31 ஆயிரத்து 173 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 936 பேர் வீடுகளிலும், 237 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

கேரளா: கேரளாவில், மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸ்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 31 ஆயிரத்து 173 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 30 ஆயிரத்து 936 பேர் வீடுகளிலும்,  237 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

இன்று (வியாழன்) மட்டும் 64 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5155 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளதால், அவர்கள் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் காரணமாக கேரளாவில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க ரூபாய் 20 ஆயிரம் கோடி பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்ததாவது:  

- இரண்டு மாதங்களில் 2000 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கப்படும்.

- ஏப்ரல் மே மாதங்களில் தலா ரூபாய் 1000 கோடி ரூபாய்க்கு கிராமிய தொழில் உறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

- ஏப்ரல் மாத சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் இந்த மாதமே வழங்கப்படும். இரண்டு மாத ஓய்வூதியம் சேர்த்து வழங்கப்படும்.

இதற்காக 1320 கோடி ரூபாய்  ஒதுக்கப்படும். 

- 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் வருமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் அந்தியோதியா பிரிவில் உள்ள குடும்பங்களில் உள்ள சிலர் இந்த ஓய்வூதியத்தை வாங்குவதில்லை. அந்த சிரமத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும். 

100 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்படும்.  

- மாநிலம் முழுவதும் வருமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் 1 மாதத்திற்கு இலவச ரேஷன் உணவு தானியம் வழங்கப்படும்.  

- வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மற்றும் அந்தியோதயா பிரிவினர் தவிர உள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

- 25 ரூபாய்க்கு மதிய உணவு கிடைக்கும் வகையில் 1000 உணவகங்களை வரும் செப்டம்பர் மாதம் திறக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.  

- தற்போதைய சூழ்நிலையில் அடுத்த மாதமே ஹோட்டல்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- மேலும் 25 ரூபாய் என்பதை 20 ரூபாயாக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 50 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது சுகாதாரத் திட்டங்களுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

- தனி நபருக்கும், நிறுவனங்களுக்கும் அரசு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். இதற்கு 14,000 கோடி ரூபாய் தேவைப்படும். 

- ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும். 

- பஸ்களில் ஸ்டேட் கேரியர் மற்றும் கான்டிராக்ட் கேரியரில் 3 மாதம் கட்டவேண்டிய வரியில் சலுகை அளிக்கப்படும். ஸ்டேட் கேரியர்களுக்கு ஏப்ரல் மாத வரியில் சலுகை கிடைக்கும். அதற்கு சமமாக கான்டிராக்ட் கேரியர்களுக்கும் சலுகை கிடைக்கும். இந்த இரு பிரிவினருக்கும் 23.60 கோடி ரூபாய் சலுகை வழங்கப்படும். 

- மின்சாரம், குடிநீர் கட்டணத்தை அபராதம் இல்லாமல் கட்ட 1 மாத கால அவகாசம் அளிக்கப்படும். 

-சினிமா தியேட்டர்களுக்கான கேளிக்கை வரியில் சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...