முக கவசங்கள் தயாரிக்கும் இயந்திரங்களை ஒரே நிறுவனத்திற்கு மட்டுமே வழங்க வேண்டும் என காவல் துறை டிஐஜி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முக கவசங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் ஸ்ரீ சாஸ்தா இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முக கவசங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

நாடு முழுவதும், கொரோனா வைரஸ் காரணமாக முக கவசங்கள் தேவை அதிகரித்து உள்ள நிலையில், அதனை தயாரிக்கும் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. 

இந்த சூழலில், அந்நிறுவனத்திடம் கியூ & கியூ என்ற நிறுவனத்தினர் முக கவசங்கள் தயாரிக்கும் இயந்திரம் வேண்டி அணுகியுள்ளனர். சென்னையை சேர்ந்த டிஐஜி (சுதாகர்) மற்றும் உள்ளூர் காவல் துறை அதிகாரிகள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்பாக முன்கூட்டியே மிரட்டி ஒரு இயந்திரத்தை கியூ & கியூ நிறுவனத்தினர் பெற்று கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, மற்ற வாடிக்கையாளர்களுக்கு இயந்திரங்களை வழங்கக்கூடாது எனவும் தங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் டிஐஜி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மூலம் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. 



இதுதொடர்பாக, அந்நிறுவன உரிமையாளர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை இன்று அளித்தனர். 

இப்புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செளந்தரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து கடிதம் வழங்கியுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....