குன்னூரில் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி; பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை!

நீலகிரி: குன்னூரில் நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே கொரோனாே வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு பொது மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

நீலகிரி: குன்னூரில் நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே கொரோனாே வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு பொது மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், இந்தியா தற்போது கொரோனா பாதிப்பில் இரண்டாவது கட்டத்தில் உள்ளது‌. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களால் பரவக்கூடியதை இரண்டாவது கட்டம் எனப்படும். மற்ற நாடுகளில் அதிக வேகமாக பரவிவரும் கொரோனாே வைரஸ் இந்தியா போன்ற மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள பகுதியில் எளிதில் பரவும்‌. அவ்வாறு பரவினால் அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். முடிந்த அளவிற்கு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார்.

அதேபோல, மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படும் இருப்பினும் கடை உரிமையாளர்கள் முன்வந்து தங்களது கடைகளை சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்டத்தில் முக கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக, கேரளா எல்லை ஓரங்களில் உள்ள பழங்குடியின கிராமங்களில் வனத்துறையினர் மற்றும் சுகாதார ஊழியர்கள் கொண்டு ஒவ்வொரு வீடுகளாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங், நகராட்சி ஆணையர் பாலு, சுகாதார அதிகாரி ரகு நந்தன், ஆய்வாளர் பாலு, குழந்தைகள் நல குழும உறுப்பினர் எம். கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...