கோவை: கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியதால் கோழி உற்பத்தியாளர்கள் சில்லி சிக்கனை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசைவ உணவு பிரியர்களின் பட்டியலில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது கோழி இறைச்சி என்று சொன்னால் அது மிகையல்ல. கோழிக்கறி மூலம் செய்யப்படும் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் கிரேவி உள்பட பல்வேறு உணவுகளுக்கு அசைவ பிரியர்களிடம் எப்போதும் தீராத மோகம் உண்டு.இதுதவிர ஆட்டு இறைச்சி மற்றும் மீன்களை விடவும் விலை குறைவு என்பதால் பல்வேறு தரப்பட்ட மக்களும் கோழிக்கறியை விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் கோழிக்கறியையும் விட்டுவைக்கவில்லை. கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தியை கிளப்பியது.
இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் பரவிய பறவை காய்ச்சல் அதற்கு மேலும் வலுசேர்த்தது. இதனால் கோழிக்கறி வாங்குவதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி மளமளவென சரிந்து ரூ.60-ஐ அடைந்துள்ளது. இந்த விலைக்கு கூட கோழி இறைச்சியை வாங்குவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் இறைச்சி வியாபாரிகள் சிலர் கொரோனா வைரஸ் பீதியால் கோழிக்கறி நுகர்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சியை வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தாததால் கோவை உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் போன்ற மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் உள்ள கடையில் 100 கிராம் சில்லி சிக்கன் 10 ரூபாய் என விற்கும் நிலைக்கு கோழி உற்பத்தியாளர்களே தள்ளப்பட்டு விட்டனர். கணிசமான விலையில் விற்கும் சில்லி சிக்கனை வாங்க மக்கள் முண்டியடித்தாலும் கோழிக்கறியை வாங்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கோழி இறைச்சியால் கொரோனா வைரஸ் நோய் பரவுவது இல்லை என தமிழக அரசின் சார்பில் விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில், வதந்திகளில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை என கோழி விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்தனர். கோழி இறைச்சியை போன்று கோழி முட்டை விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
மேலும், லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்து கடை வாடகை கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தலாம் என முடிவு செய்யும் போதெல்லாம் தவறான வதந்திகளால் தங்களது குடும்ப பொருளாதாரம் சீர்குலைவதாக தெரிவித்தனர். தமிழக அரசு கோழி விற்பனையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பிற்கும் கோழி இறைச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தி தவறான பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழி இறைச்சி விற்பனை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.