கோவை அரசு மருத்துவமனையில் ஸ்வீடன் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி கொரோனா அறிகுறியுடன் அனுமதி! ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி ஒருவர் என மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை அனுப்பப்பட உள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி ஒருவர் என மூன்று பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை அனுப்பப்பட உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 232 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் 45 பேர் வெளிநாட்டினர் மற்றும் 187 பேர் வெளிநாடு சென்று கோவை திரும்பியவர்கள். குறிப்பாக, வெளிநாடுகள் சென்று கோவை திரும்பியவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஸ்வீடன் சென்று கோவை மேட்டுப்பாளையம் வந்த தம்பதியருக்கு சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, பெங்களூரில் உயர்கல்வி பயின்றுவரும் 23 வயது மதிக்கத்தக்க மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து கோவை வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து சூலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது இந்த மூன்று பேரும் கொரோனா சிறப்புப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...