வாகனங்கள் இயக்கம் குறைவால் வருமான இழப்பு; வாகன வரி செலுத்திட கால அவகாசம் கோரி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் கோரிக்கை

கோவை: வாகனங்கள் இயக்கம் குறைவானதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாகன வரி செலுத்திட கால அவகாசம் வழங்கிட வேண்டும் என அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: வாகனங்கள் இயக்கம் குறைவானதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாகன வரி செலுத்திட கால அவகாசம் வழங்கிட வேண்டும் என அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான டுரீஸ்ட் வாகனங்கள் இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் காலாண்டு வரி சலுகைகளை செலுத்த கால அவகாசம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பொதுமக்கள் நடமாட்டம் சாலைகளில் மிகவும் குறைவாகி விட்டதாகவும் இதனால் வாகன இயக்கம் முழுவதும் குறைந்து விட்டதாக கூறிய அவர்கள், வருமானம் இன்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், காலாண்டுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய வரிக்கு கால அவகாசம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். நாள் ஒன்றுக்கு வாகனம் இயங்கினால் எரிபொருள் செலவு, ஓட்டுனர் சம்பளம் என செலவுகள் போக 500 முதல் 600 ரூபாய் வரை கிடைக்கப் பெற்று வந்த தொகையில் இருந்து வரி, தவணைகள், குடும்ப செலவுகளை சமாளித்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பத்து சதவீத வாகனங்கள் கூட இயங்காத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நிலை அறிந்து வரி மற்றும் வங்கிக் கடன் செலுத்த கால அவகாசம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...