திருப்பூரில் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி சந்தையில் சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட் பகுதியை இடித்து புதிய கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இன்று பொக்லைன் இயந்திரங்களுடன் கடைகளை இடிப்பதற்கு வந்த அதிகாரிகளை வியாபாரிகள் மார்க்கெட் பகுதிக்குள் நுழைய விடாமல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து, போலீசார், அதிகாரிகள் மற்றும் வணிகர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக சந்தையை இடிக்கும் பணியை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...