கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற கோவை வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள்

கோவை: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருவதால் அந்த நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கோவை வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவை: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருவதால் அந்த நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கோவை வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

1. வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை 31.03.2020 வரை தயவுசெய்து நீதிமன்றங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முடிந்த அளவு வழக்கறிஞர்களே நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2. வழக்காடிகளின் வருகையின்மைக்கு குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

3. குற்றவியல், உரிமையியல் வழக்குகளில் adverse Orders கிடையாது.



4. 19.03.2020 முதல் 31.03.2020 வரை நமது CBA Canteen திறக்கப்படாது.

5. வழக்கறிஞர்கள் தங்களது Chamber ல் வழக்காடிகளை சந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

6. நீதிமன்றங்களில் நிபந்தனை கையொப்பம் போடும் வழக்காடிகள் காலை 9.45 மணிக்கே வந்து அந்தந்த நீதிமன்றத்தில் கையொப்பம் போட்டுவிட்டுச் சென்றுவிடலாம்.

7. 19.03.2020 முதல் 31.03.2020 வரை நீதிமன்ற பின்புற நுழைவாயில் (wicket Gate) காலை 9.30 to 11.00 and மாலை 5.00 to 6.30 வரை மட்டுமே திறந்திருக்கும். (இது நமது PDJ உத்தரவு)

8. 19.03.2020 முதல் Gate No.1, Gate No.4 and Wicket Gate ஆகிய நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பு, பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் மற்ற நுழைவாயில்கள் மூடப்பட்டிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தயவு கூர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.

இவ்வாறு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....