கோவை: மேட்டுப்பாளையத்தில், தனியார் சாய ஆலைகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, நகராட்சி ஆணையாளர் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மத்திய சுற்றுச்சூழல் முதுநிலை பொறியாளர் பூர்ணிமா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன், கோட்டப் பொறியாளர் ஜெயலட்சுமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகும் பவானி ஆறு, பில்லூர் அணை வழியாக மேட்டுப்பாளையம் வழியே ஈரோடு வரை சென்று பவானி அணையை அடைகின்றது. இவ்வாற்றுப் படுகையின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள சுமார் 25 இலட்சம் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், பவானி ஆற்றினை பிரதானமாகக் கொண்டு தமிழ்நாடு அரசின் குடிநீர் வழங்கல் துறை பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு பவானி ஆற்றில் தனியார் ஆலைகளிலிருந்து வரும் கழிவுநீர் கலப்பதால் ஆற்றுநீர் மாசடைவதாக வந்த புகாரையடுத்து தனியார் ஆலைகளை ஆய்வு செய்யும் பணியினை மேற்கொள்ளவும், சம்மந்தப்பட்ட தனியார் ஆலைகளில் தனியான நர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர் மறுசுழற்சி மையங்கள் அமைக்கவும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தனியார் ஆலைகளில் எவரேனும் ஆற்று நீரில் விடுகின்றனரா என்று கள ஆய்வு மேற்கொள்ளுவதுடன், ஆலைகளுக்கு அருகாமையில் உள்ள ஆற்று நிறையும் ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, நேற்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், நகராட்சி ஆணையாளர், மத்திய சுற்றுச்சுழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர்கள் அடங்கிய குழுவினருடன் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், யுனைடேட் பீளீச்சர்ஸ் லிட் நிறுவனத்திலும் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தினையும், நீர் மறுசுழற்சி மையத்தினையும் நேரில் பார்வையிட்டதுடன், அந்நிறுவனத்தின் அருகில் உள்ள பவானி ஆற்று நீரில் கழிவுகள் ஏதும் கலந்துள்ளதா என ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள ஏனைய நிறுவனங்களான ITC, சாரதா டெரி ப்ராடெக்ட் லிட், உள்ளிட்ட ஆறு நிறுவனங்களிலும் நீர்சுத்தகரிப்பு நிலையங்கள் மறுசுழற்சி நிலையங்கள் இருப்பதை உறுதி செய்யவும், இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுவதுடன், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் தொடர் திடீர் ஆய்வுகள் நடத்தவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.