கொரோனா எதிரொலி: வீடுகளில் வேப்பிலை கட்டியும் மாட்டு சாணம் தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பொதுமக்கள்!

கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக கோவை ஆலாந்துறை அடுத்த மத்வராயபுரம் ஊராட்சியில் வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டியும் வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக கோவை ஆலாந்துறை அடுத்த மத்வராயபுரம் ஊராட்சியில் வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையை கட்டியும் வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரசால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன. இதனால் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த மத்வராயபுரம் ஊராட்சியில் உள்ள வீடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்ப்பதற்காக வீட்டு வாயில்கள் முன்பு வேப்பிலையைக் கட்டியும் வாசல்களில் மாட்டு சாணம் கொண்டு தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மத்வராயபுரம் ஊராட்சி சார்பில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது, வைரஸ் பரவாமல் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர். இது தவிர ஊராட்சி சார்பில் வீடுகள் முன்பு வேப்பிலை கட்டவும், மாட்டு சாணம் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுவராயபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றிவேல் கூறுகையில், தங்களுடைய ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் மக்களுக்கு விநியோகம் செய்து வருவதாகவும் நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கு சென்று வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு எடுத்துரைப்பதாகவும் வீடுகளில் வேப்பிலை கட்டவும், மாட்டு சாணம் கொண்டு வாசல்களில் தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், தங்களுடைய ஊராட்சி கேரள வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறியவர், தங்களுடைய ஊராட்சியில் புதிதாக வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...