திருப்பூர் மாநகராட்சியில் 1337 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்; சுகாதாரப்பணிகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் - மாநகராட்சி ஆணையாளர்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை உதவி ஆணையர் சந்தான நாராயணன், மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் தாக்கல் இன்று செய்தார். இதில் 1337 கோடி ரூபாய் வருவாய் வரவினம் என்றும், 1048 கோடி வருவாய் செலவினம், என ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை உதவி ஆணையர் சந்தான நாராயணன், மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் தாக்கல் இன்று செய்தார். இதில் 1337 கோடி ரூபாய் வருவாய் வரவினம் என்றும், 1048 கோடி வருவாய் செலவினம், என ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார். 

குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் 5.36 கோடி உபரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார பணிகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்தார். 



இது குறித்து மேலும் ஆணையாளர் சிவக்குமார் கூறுகையில், "திருப்பூருக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் நினைவில் வைத்து இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் நான்காவது குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி பணிகள், உள்ளிட்ட திட்டப்பணிகள் அரசு நிதியின் மூலம் நடைபெற்று வருகிறது. பொது நிதி மூலமாக அன்றாட பராமரிப்பு மற்றும் மூலதனப்பணிகள் நடந்து வருகிறது.பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பாக செய்து தர மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்."

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திருப்பூரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது, என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். 

"பெரிய வணிக வளாகங்கள், சிறிய கடைகளுக்கு தேவையான விழிப்புணர்வு அளித்து வருகிறோம். சினிமா தியேட்டர்கள் எல்லா இடங்களிலும் மூடப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்லப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலமாக பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் மருத்துவக்குழுக்கள் முகாமிட்டு, சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்கிறார்கள்", என தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசின் அறிவுரைகளை திருப்பூர் மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் கோவில் வழிக்கு கொண்டு செல்லும் பணிகளும், மார்க்கெட் இடம் மாற்றும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரப் பணிகள் நோய்பரவலை தடுக்க தேவையான அளவு முழு வீச்சில் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...