ஆந்திர போலீசாரால் தவறுதலாக கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த லாரி ஓட்டுனருக்கு பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின் பிணை..!

கோவை: கோவையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஆந்திர போலீசாரால் தவறுதலாக கைது செய்யப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி பிணை கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவருக்கு பிணை கிடைத்ததுள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஆந்திர போலீசாரால் தவறுதலாக கைது செய்யப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி பிணை கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவருக்கு பிணை கிடைத்ததுள்ளது.

கோவை மாவட்ட சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட ஒண்டிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன், வாணீஸ்வரி தம்பதியினர். இந்த தம்பதியனருக்கு கிஷோர் என்ற 10 வயது மகன் உள்ளார். ஏழ்மையில் வாடும் இந்த குடும்பத்தார் ஏதாவது சொந்தமாக தொழில் செய்து முன்னேர வேண்டும் என்ற நோக்கில் ஒப்பந்த அடிப்படையில் TN 52 L 1866 என்ற எண் கொண்ட லாரியை விலைக்கு வாங்கி அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இப்படியிருக்க, அரிசி கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசார் தவறுதலாக கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி ரவிச்சந்திரனை விசாரணை என்று அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து பல்வேறு சித்திரவதைப்படுத்தி 16ம் தேதி சிறைக்குட்படுத்தினர்.

மிகுந்த மன உளைச்சலில் சிறையில் தவித்து வந்த ரவிச்சந்திரனுக்கு பல்வேறு கட்ட முயற்சிகளிலும் பிணை (பெயில்) கிடைக்கவில்லை. ஆந்திரா நீதிமன்றத்தில் இரண்டு முறை பிணைக்காண முயற்சி மேற்கொண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனின் மனைவி வாணீஸ்வரி ஊடகங்களை தொடர்பு கொண்டு அவர்களது நிலைமையை விளக்கினார். அதேபோல பல அதிகாரிகளிடம் என் கணவரை மீட்டுத்தாருங்கள் என பத்து வயது சிறுவனுடன் சுற்றித்திரிந்து புகார்கள் அளித்தார். 

ஆனால் எதுவும் காதில் வாங்கிக் கொள்ளபடாத பட்சத்தில், எழுத்தாளர் பாமரன் உதவியுடன் நடிகர் சத்யராஜ்ஜின் உடனடி முயற்சியில் ஆந்திரா மாநில அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ரோஜாவின் கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி தாமாக முன் வந்து பாதிக்கப்பட்ட தரப்பினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

இதைதொடர்ந்து ரோஜாவின் உதவியாளர் மூலம் ஆர்.கே.செல்வமணி நியாயத்தை எடுத்துரைத்து பல்வேறு கட்ட முயற்சியுடன் பாதிக்கப்பட்ட தமிழர் ரவிச்சந்திரனுக்கு பிணை கிடைக்க உதவினார்.

இது குறித்து ரவிச்சந்திரனின் மனைவி வாணிஸ்வரி கூறும்போது:-

எனது கணவர் ஒரு தவறும் செய்யாமல் ஆந்திர போலீசார் அழைத்துச் சென்று கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல அவருக்கு பெயில் கிடைப்பது சிரமமாக இருந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் பெயில் தர மறுத்தனர். அப்போது நடிகர் சத்யராஜ் தகவல் அறிந்து உடனடியாக இயக்குனர் ஆர் கே செல்வமணியை தொடர்புகொண்டு உதவி செய்யக் கோரினார்.

அதேபோல ஆர்கே செல்வமணி ஆந்திர அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் ரோஜா அவர்களின் முயற்சியுடன், அவரது உதவியாளர் மூலம் பல்வேறு கட்ட முயற்சிகள் செய்து பெயில் கிடைக்க உதவியுள்ளார்.



இதன் மூலம் எனது கணவர் இன்று சிறையில் இருந்து தமிழகம் நோக்கி வந்துகொண்டிருக்கிறார். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் விரைவில் எனது கணவரின் வழக்கை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆந்திர அரசுக்கு இதை கோரிக்கையாக வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...