திருப்பூர்: திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் உயர் பதவியை அடைவதற்காக தன்னைத் தானே வெட்டிக்கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருகிறார் பகவான் நந்து(50). இவர் நேற்று முன்தினம் இரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டதாக புகார் அளித்துவிட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகாரை அடுத்து போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் பகவான் நந்துவின் ஓட்டுநர் ருத்ரமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்ட போது பகவான் நந்து உத்தரவின் பெயரிலேயே பகவான் நந்துவை தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, இந்து மக்கள் கட்சியில் முக்கிய பதவி அடைவதற்காக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் ருத்ரமூர்த்தி மற்றும் பகவான் நந்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளார்.