ஆனைக்கட்டியில் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்ட்டை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கோவை: ஆனைக்கட்டி பகுதியில் கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை 8 நாட்கள் காவல்துறையினர் விசாரணை நடத்த அனுமதி வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: ஆனைக்கட்டி பகுதியில் கியூ பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை 8 நாட்கள் காவல்துறையினர் விசாரணை நடத்த அனுமதி வழங்கி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் அடிக்கடி மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வெளியாகும் தகவலால் கியூ பிரிவு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பு பணி மற்றும் தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், எல்லைப் பகுதிகளில் இருந்து நகர்புறங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக வெளியான ரகசிய தகவலின் பேரில் தணிக்கைச்சாவடிகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கடந்த 11ம் தேதி கேரளாவில் இருந்து ஆனைக்கட்டி வழியாக கோவை வரும் அரசு பேருந்தை ஆனைக்கட்டி வனத்துறை தணிக்கைச்சாவடியில் சோதனை மேற்கொண்ட போது பேருந்துக்குள் இருந்த மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை செய்தனர்.

இதனை தொடர்ந்து, மாவோயிஸ்ட் ஸ்ரீமதி என்கிற சோபாவை கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வரும் மார்ச் 26ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், விசாரணை நடத்த அனுமதி கோரி காவல்துறையினர் 10 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில் முதன்மை நீதிபதி சக்திவேல் 8 நாட்கள் அனுமதி அளித்து உள்ளார். மேலும், ஒருநாள் விட்டு ஒரு நாள் வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....