கொரோனா தடுப்பு: வால்பாறையில் சார் ஆட்சியர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

கோவை: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சார் ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறையிருடன் வால்பாறையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.


கோவை: கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சார் ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறையிருடன் வால்பாறையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள பன்னிமேடு தேயிலை தோட்டத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதனால் வால்பாறை மக்களிடையே இச்சம்பவம் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 



இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் இன்று ஆலோசணை கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஏற்கனவே வால்பாறை நகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



மேலும், பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்தல், அடிக்கடி கை கழுவுதல், நீர் சத்து நிறைந்த ஆகாரங்களை பருக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

மேலும், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.



இதோடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வால்பாறையில் தங்கும் விடுதிகளில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவ பொருட்களின் விலையினை நிர்ணயித்து கூடுதலாக விற்க கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் அரசின் அறிவிப்பின் படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...