திருப்பூர்: கறிக்கோழிகளால் கொரோனா வைரஸ் பரவுவதில்லை என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200 கிலோ சில்லி சிக்கனை பொதுமக்களை வழங்கி திருப்பூரில் உற்பத்தியாளர்கள்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயம் மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழிலை தான் மக்கள்பெரும்பாலும் மேற்கொண்டுவருகின்றனர். இங்கு 1800 க்கும் அதிகமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.இந்த பண்ணைகள் மூலம் மாதம் தோறும் 45 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மதுரை ஆகிய நகரங்களுக்கும்,அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கறிக்கோழிகளின் மூலம் தான் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இதனால் கறிக்கோழி விற்பனை படிப்படியாக குறைந்து வருகின்றது.இதனால் விலையும் குறைந்து விட்டது. விலை குறைந்தாலும் பொதுமக்கள் கறிக்கோழிகளை வாங்க தயக்கம் காட்டி வருவதால் இறைச்சி கடை வியாபாரிகள் தற்போது கவலையடைந்துள்ளனர்.
கறிக்கோழி தொழில் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் நிலையில் கொரோனா வைரஸின் பாதிப்பு பண்ணையாளர்களை நிலைகுலைய வைத்துவிட்டது
கடந்த சில வாரங்களாக வெளி மாவட்டத்திற்கும் வெளிமாநிலங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு செல்லப்படவில்ல.இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கறிக்கோழிகள் தேக்கம் அடைந்து விட்டன.

இதனையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கறிக்கோழிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது இல்லை என்பதை பொது மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக 200 கிலோ சில்லி சிக்கனை சமைத்து ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
மேலும் கறிக்கோழி,முட்டை சாப்பிடுவதால் வைரஸ் ஏற்படுவதில்லை என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.