கோவையில் கொரோனா கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

கோவை: கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை கண்காணிப்பதற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரி வளாகத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள் இந்த மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை கண்காணிப்பதற்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரி வளாகத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள் இந்த மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை கண்காணிப்பதற்கு என பிரத்யேகமாக தனியார் கல்லூரி வளாக கட்டிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத தனியார் பொறியியல் கல்லூரியில் வளாகத்தில் இந்த கொரோனா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்த பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேட்டியளித்தார். அப்போது, கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தமிழக அரசு சார்பில் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை 6 குழுவினராக பிரிந்து 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் எனவும் சளி, இருமல் போன்றவைகள் இருந்தால் பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கொரோனா அறிகுறியுடன் 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 10 பேரின் அறிக்கையும் நெகட்டீவ் என வந்துள்ளது எனவும் விமானம் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வந்தால் அவர்களை அனுமதித்து கண்காணிக்க கருமத்தம்பட்டி அடுத்த வினோபாஜி நகர் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் 200 படுக்கைகள் அமைக்கும் அளவிற்கு கண்காணிப்பு மையமாக இந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த பகுதி மக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் எனவும் இன்று முதல் இந்த கண்காணிப்பு மையம் செயல்பட துவங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியும் சிகிச்சை பெற்று வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்தவருக்கு கொரோனா இல்லை என்பது ஆய்வு முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது எனவும் அவர் இன்று சிறுநீரக பிரச்சினை காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவித்தார். சிறுநீரக பிரச்சினையுடன் அவர் பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டே அவர் உயிரிழந்துள்ளார் எனவும் ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, கொரோனா கண்காணிப்பு மைய வளாகத்தில் இருந்து வெளியே வந்த போது மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை வினோபாஜி நகர் பொது மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது, கண்காணிப்பு மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளும், தொழில் கூடங்களும், கல்வி மையங்களும் இருப்பதாக தெரிவித்தனர். இந்த மையம் வருவது அச்சமாக இருப்பதால் வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அப்போது, வாகனத்தின் முன் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்திய மக்களிடம் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மக்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ராசாமணி, இந்த கொரோனா கண்காணிப்பு மையத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என பொது மக்களிடம் உறுதியளித்தார். இந்த முற்றுகை போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...