திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை அரிவாளால் வெட்டிய 7 பேர் கொண்ட கும்பல்; போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் பகவான் நந்து (50). இவர் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில், பகவான் நந்து வழக்கம் போல் நேற்று இரவு கடையை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பகவான் நந்துவின் இரு சக்கர வாகனத்தை மறித்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் பகவான் நந்துவை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பகவான் நந்து வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...