வால்பாறையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..! கிருமி நாசினி அடிக்க உத்தரவு

கோவை: வால்பாறையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னிமேடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள மழுக்கப்பாறை வனத்துறை சோதனைச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னிமேடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள மழுக்கப்பாறை வனத்துறை சோதனைச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பன்னிமேடு தேயிலை தோட்டத்தைச் சேர்ந்த கமலம் என்ற பெண் கொரானா அறிகுறியுடன் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் வால்பாறை மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, பன்னிமேடு மற்றும் சுற்றுப் பகுதியிலுள்ள தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு முறைகள் பற்றி தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.



மேலும், பன்னிமேடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள மழுக்கப்பாறை வனத்துறை சோதனைச்சாவடியில் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி கண்டிப்பாக அடிக்கும்படியும் உத்தரவிட்டார். காய்ச்சல், சளி உள்ளவர்கள் உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...