கோவை இ.எஸ்.ஐ,. மருத்துவமனையில் 6 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி; ரத்தம் மாதிரிகளின் முடிவுக்காக காத்திருப்பு.

கோவை: கொரோனா அறிகுறி தொடர்பாக கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.



கோவை: கொரோனா அறிகுறி தொடர்பாக கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 6 பேர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது. 

இந்தநிலையில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக 6 பேர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொள்ளாச்சியை சேர்ந்த இத்தாலி நாட்டில் இருந்து வந்த 40 வயது நபர், கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து விழாவிற்கு வால்பாறைக்கு வந்த 60 வயது மூதாட்டி, மும்பை வழியாக கோவைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர், ஷார்ஜாவிலிருந்து வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், சிங்கப்பூரில் இருந்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த 30 வயது நபர் என 6 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த நிலையில் 4 பேரின் ரத்த மாதிரிகள் சென்னைக்கு ஆய்வகத்திற்கு ஏற்கனவே  அனுப்பப்பட்ட நிலையில், பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் இருவரின் ரத்த மாதிரிகள் இனிமேல் அனுப்பப்படும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...