வெளிமாநிலங்களில் இருந்து கோவை வரும் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை!

கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து கோவை வரும் ரயில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து கோவை வரும் ரயில் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்தியா முழுவதும் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சார்பில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து இரயில்கள் மூலமாக கோவை வருபவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், கிருமி நாசினி மூலம் பயணிகளின் கைகளை சுத்தம் செய்வது, முக கவசங்கள் அணிவதன் அவசியம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கொரோனோ விழிப்புணர்வு நோட்டீஸ்களும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.



ரயில் நிலையங்களில் கொரோனோ பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் 3 நாட்களுக்கு பயணிகளிடம் கொரோனோ பரிசோதனை நடத்தப்படுமென ரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை தெரிவித்தார். இந்த சோதனையில் கொரோனோ அறிகுறி தென்படும் பயணிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் இதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...