கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து ஆய்வுக்கூட்டம்‌

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்‌.

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்ததாவது:-

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள்‌, மாநகர சுகாதார அலுவலர்‌ மற்றும்‌ சுகாதார அலுவலர்கள்‌, மாநகராட்சியின்‌ அனைத்து பிரிவு அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ அனைவரும்‌ போர்க்கால அடிப்படையில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியிலுள்ள அனைத்து விதமான வணிக வளாகங்கள்‌, திரையரங்குகள்‌, கல்வி நிறுவனங்கள்‌, பள்ளிகள்‌ அனைத்தும்‌ 31.03.2020 வரை மூடப்பட்டிருக்க வேண்டும்‌. இதனை மீறி திறந்து வைக்கப்பட்டிருப்பின்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ கடும்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ கைகளை கழுவுதல்‌ தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகிக்கும்‌ பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பூங்காக்கள்‌, மாநகராட்சி வ.உ.சி. உயிரியல்‌ பூங்கா, மாநகராட்சிக்குச்‌ சொந்தமான உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌ ஆகிய அனைத்தும்‌ நாளை முதல்‌ 31.03.2020 வரை செயல்படாது.

பொதுமக்கள்‌ யாருக்காவது காய்ச்சல்‌, இருமல்‌, சளி போன்றவை இருந்தால்‌ அரசு மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார மையங்களில்‌ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்‌. பொதுமக்கள்‌ சுயமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பதை தவிர்த்து உரிய மருத்துவரின்‌ ஆலோசனை பெற்ற பின்னரே மருந்து, மாத்திரைகளை உபயோகிக்க வண்டும்‌.

மேலும்‌, சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ தூய்மை பணிக்கான மருந்துப்‌ பொருட்களை போதியளவில்‌ இருப்பு வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்‌, நகர் நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, உதவி ஆணையர்கள்‌ எம்‌.சுந்தாராஜன்‌ (பணியமைப்பு), வி.சரவணன்‌ (கணக்கு), உதவி ஆணையர்‌ (வருவாய்‌) என்‌.அண்ணாதுரை, மண்டல உதவி ஆணையர்கள்‌ தி.ர.ரவி(தெற்கு), செந்தில்குமார் ரத்தினம்‌(வடக்கு), மகேஷ்கனகராஜ்‌ (மத்தியம்‌) ம.செல்வன்‌ (கிழக்கு), ஏ.ஜே.செந்தில்‌ அரசன்‌ (மேற்கு), செயற்பொறியாளர்‌ (திட்டம்‌ மேற்கு மண்டலம்‌ எஸ்‌.ரவிச்சந்திரன்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...