கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டி பாஜக சார்பில் கோவை கோனியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டி கோவை மாவட்ட பாஜக சார்பில் கோனியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

கோவை: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டி கோவை மாவட்ட பாஜக சார்பில் கோனியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு உள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.



இந்நிலையில், உலகையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவை மாவட்ட பாஜகவினர் சார்பில் நடத்தப்பட்ட இப்பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.



கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலில் கோவையையும் மக்களையும் கொரோனோ வைரசிடம் இருந்து காக்க வேண்டி வழிபாடு நடத்தியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...