கொரானா எதிரொலி: வெறிச்சோடிய வால்பாறை சுற்றுலாத் தலம்..! வியாபாரிகள் கவலை

கோவை: கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் வால்பாறை சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை: கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வரும் நிலையில் வால்பாறை சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு உள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்கள், ஆறுகள், அழகிய புல்வெளிகள் மற்றும் சீதோஷ்ன தட்ப வெட்ப நிலையை ரசித்து அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட காட்டேஜ்கள் உள்ளன.

இந்நிலையில், உலகமெங்கும் பரவியுள்ள கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்த்து வருகின்றனர். அரசு சார்பிலும் கல்வி நிலையங்கள், திரையரங்குகள் உட்பட பல்வேறு பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 



இதனால் வால்பாறை பகுதியிலுள்ள சுற்றுலாத் தலங்களான கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையார் அணை உட்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதன் காரணமாக, வால்பாறை பகுதியிலுள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள் தேநீர் கடைகள் கூட்டமின்றி வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...