கொரோனா எதிரொலி: கோவையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்காணிக்க 100 படுக்கைகளுடன் சிறப்பு தனிப்பிரிவு தயார்!

கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோவை விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக கோவை விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு உத்தரவின் பேரில் விமான நிலையங்களில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வெளி நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்பே வெளியே அனுப்பப்படுகின்றனர். ஆனால், வைரஸ் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், வைரஸ் அறிகுறிகளுடன் கோவை விமான நிலையம் வரும் நபர்கள் சுகாதாரத்துறையின் ஸ்கிரீனிங்க்கு பிறகு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இதனிடையே தற்போது, கோவை விமான நிலையம் மூலம் குறிப்பிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டோரை கண்காணிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கனவே ஆஸ்துமா, இருதய நோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தனி கண்காணிப்பு மையத்திற்கு சுகாதாரத் துறையால் அழைத்துச் செல்லப்படுவர்.



மேலும், கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தேஜா சக்தி மகளிர் பொறியியல் கல்லூரி விடுதி, தற்போது சிறப்பு கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 100 படுக்கை வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் வரும் பயணிகள் 14 நாட்கள் தங்க வைத்து கண்காணிக்கப்படுவார்கள். இதில் கொரோனோ அறிகுறி தென்பட்டால் இஎஸ்ஐ மற்றும் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்படுமெனவும் மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...