கோவை: கொரோனா அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டு சுற்றுலா பயணியின் இரத்த மாதிரிகள் அறிக்கையில் கொரோனா பாதிப்பு இல்லை (நெகட்டீவ்) என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கொரோனா அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டு சுற்றுலா பயணியின் இரத்த மாதிரிகள் அறிக்கையில் கொரோனா பாதிப்பு இல்லை (நெகட்டீவ்) என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொடரும் அச்சத்தால் அனைத்து விமான நிலையங்களும் ஸ்கிரீனிங் முறையில் கொரோனோ வைரஸ் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரியவந்தது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். பின்னர் பள்ளிவாசல்களை சுற்றிப் பார்த்த அவர்கள் ஈரோடு சென்றனர்.
கோவை வந்த ஏழு பேரில் ஒருவரான நாற்பது வயது மதிக்கத்தக்கவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனிருந்தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப கோவை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனையின் போது அவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவருக்கு இரத்தம் மற்றும் சலி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் நேற்று வந்த ஆய்வின் முடிவில் அவருக்கு கொரோனோ நெகட்டிவ் என தெரியவந்ததைத் தொடர்ந்து, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இவரது மரணம் குறித்து தாய்லாந்து நாட்டின் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.