கோவை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சிறைவாசிகளை சந்திக்க சிறைத்துறை நிர்வாகம் அனுமதிக்காததால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கோவை மத்திய சிறையில் 2000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் நேர்காணல் கிடையாது என்ற சிறைத்துறை தகவலால் தவிப்பிற்குள்ளானர். முன்னறிவிப்பு இல்லாமல் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறிய உறவினர்கள் வாங்கி வந்த பழங்கள், துணிகள் போன்றவையும் கொடுக்கக் கூடாது என சிறைத்துறை நிர்வாகம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தனர். மதுரை உட்பட பல்வேறு வெளியூர்களில் இருந்து கோவை மத்திய சிறைக்கு கைதிகளை பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.