கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், மால்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து, ரயில் பயணங்கள், சுற்றுலா மேற்கொள்வதை போன்றவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
அதேசமயம், வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கமாக செயல்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டது. இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம், தேனீரகம், கருவூலம் உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் காலை முதல் சுத்தம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.