கொரோனோ அச்சுறுத்தல்: மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் போன்ற கேளிக்கை இடங்களை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பொழுதுபோக்கு மற்றும் மக்கள் கூடும் இடங்களை தற்காலிகமாக மூட தமிழக அரசு அறிவித்தும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிளாக் தண்டர் திறந்திருப்பது மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக அனைத்து பொழுதுபோக்கு மற்றும் மக்கள் கூடும் இடங்களை தற்காலிகமாக மூட தமிழக அரசு அறிவித்தும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிளாக் தண்டர் திறந்திருப்பது மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் முழுவதும் கொரோன வைரஸ் தாக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் கல்வி நிலையங்கள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், வாட்டர் தீம் பார்க் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்றாலும் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மால்கள், பள்ளிகள், திரையரங்குகள் போன்றவற்றை வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் பிளாக் தண்டர் திறந்திருப்பது மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக பயன்படுத்தும் இந்த விளையாட்டு தளம், இந்த சூழலில் திறந்திருப்பதற்கு மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும், பிளாக் தண்டர் போன்ற கேளிக்கை இடங்களை மூட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...