சாலை விபத்தில்‌ உயிரிழந்த 2 காவலர்கள் குடும்பத்துக்கு காவலர்‌ குழு காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.30 லட்சம்‌ நிதியுதவி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில்‌ உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்துக்கு காவலர்‌ குழு காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில்‌ உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்துக்கு காவலர்‌ குழு காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட காவல்துறையில்‌, பங்களாபுதூர்‌ காவல்நிலையத்தைச்‌ சார்ந்த காவலர் வரதராஜன்‌ என்பவர்‌ கடந்த 11.11.2019-ம்‌ தேதி கோபி - சத்தி சாலையில்‌ கரட்டடிபாளையம்‌, ஆண்டவர்‌ ஐ.டி.ஐ அருகில்‌ நடைபெற்ற சாலை விபத்திலும்‌, ஈரோடு வடக்கு போக்குவரத்து காவல்நிலையத்தில்‌ பணிபுரிந்து வந்த தலைமை காவலர்‌ செந்தில்குமார்‌ என்பவர்‌ கடந்த 20.11.2019-ம்‌ தேதி ஈரோடு சத்தி ரோடு கனிராவுத்தர்‌ குளம்‌ அருகில்‌ கண்ணன்‌ பெட்ரோல்‌ பங்க்‌ அருகில்‌ நடைபெற்ற சாலை விபத்திலும்‌ உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இன்று இரு காவலர்களின்‌ குடும்பத்தினர்களுக்கும்‌ மேற்கு மண்டல காவல்துறை தலைவர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்‌ பேரில்‌, ஈரோடு மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ அவர்கள்‌, ஈரோடு பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ (SBI) மூலம்‌ காவலர்‌ குழு காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌ பிரத்தியேகமாக தலா ரூபாய்‌ 30 லட்சம்‌ வழங்கப்பட்டது.



கோவை, காவல்துறை தலைவர்‌ அவர்களின்‌ அலுவலகத்தில்‌ மறைந்த காவலர்‌ வரதராஜன்‌ அவர்களின்‌ மனைவி பாரதி மற்றும்‌ மறைந்த காவலர்‌ செந்தில்‌ குமார்‌ அவர்களின்‌ மனைவி கலா ஆகியோருக்கு கோவை மண்டல காவல்துறை தலைவர்‌ கே.பெரியய்யா, இ.கா.ப., அவர்களால்‌ தலா ரூபாய்‌ 30 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

அப்போது, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்‌ மற்றும்‌ ஈரோடு பாரத ஸ்டேட்‌ வங்கியின்‌ மேலாளர்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌. இதுவரை ஈரோடு மாவட்டத்தில்‌ கடந்த 3 மாதங்களில்‌ மறைந்த காவலர்களின்‌ குடும்பத்தினருக்கு ரூ.1,20,00.000,/- (ஒரு கோடியே இருபது லட்சம்‌) காவலர்‌ குழு காப்பீட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ பாரத ஸ்டேட்‌ வங்கியிலிருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌ அரசால்‌ வழங்கப்படவேண்டிய அனைத்து பணப்பயன்களும்‌ உடனடியாக நான்கு குடும்பத்தினருக்கும்‌ வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...