கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: கோவை விமானநிலையம் அருகே தயாராகும் சிறப்பு வார்டு!

கோவை: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் தேர்வு செய்யப்பட்டு பிரத்தியேக வார்டு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி இடத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் தேர்வு செய்யப்பட்டு பிரத்தியேக வார்டு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவின் பேரில், விமான நிலையங்களில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் தீவிர பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

இதில் குறிப்பிட்ட சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் , தென்கொரியா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ஈரான், இத்தாலி போன்ற போன்ற 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்பே வெளியே அனுப்பப்படுகின்றனர். அதேசமயம், வைரஸ் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வைரஸ் அறிகுறிகளுடன் கோவை விமான நிலையம் வரும் நபர்கள் சுகாதாரத்துறையின் ஸ்கிரீனிங்க்கு பிறகு கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ எஸ் ஐ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது கோவை விமான நிலையம் மூலம் குறிப்பிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் கொரோனா சந்தேகத்திற்குரிய நபர்கள் விமான நிலையம் அருகில் தயாராகிவரும் பிரத்தியேக பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த தனிப்பிரிவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தனிப்பிரிவில் சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு, குறிப்பாக வீட்டில் வைத்து பார்க்கக் கூடிய நிலையிலுள்ள நபர்களில் நோய்வாய்ப்பட்டவர்களோ அல்லது வயது முதிர்ச்சி அடைந்தவர்களோ என பாதிக்கக் கூடிய நிலையில் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...