கோவை: கோவை மாநகர காவல்துறையின் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையோர கடைகள், தள்ளு வண்டி விற்பனை மூலம் ஈட்டி வந்த வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து சாலையோர நடைபாதை வியாபாரிகள் நலசங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மடியேந்தி மனு அளித்தனர்.

கோவையில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபாதைகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தள்ளு வண்டிகளில் பழங்கள், இரவு நேர உணவு கடைகள் என ஏராளமானோர் தொழில் செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் இரு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும் பாதுகாப்பு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாநகர காவல்துறை குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து வியாபார நிறுவனங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டி வியாபாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையோர கடைகள், தள்ளு வண்டி விற்பனை மூலம் ஈட்டி வந்த வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து மடியேந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வியாபாரம் மேற்கொண்டு வரும் நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை நடைபாதை, தள்ளு வண்டி வியாபாரம் செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை தளர்த்தி வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.