கொரோனோ எதிரொலி: கோவையில் வெறிச்சோடிய மால்கள் மற்றும் சுற்றுலா பகுதிகள்..!

கோவை: தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதித்திருப்பதால் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மால்கள், ஆரம்ப பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவை: தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதித்திருப்பதால் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மால்கள், ஆரம்ப பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், திரையரங்குகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து வைரஸ் பரவாமல் இருப்பதைத் தடுக்கும் விதமாக, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு சோதனை சாவடிகள், நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளின் உதவியோடு மேற்கொள்ளப்படுகிறது.



குழந்தைகளுக்கு பரவாமல் இருப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள் மற்றும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தினமும் அறிக்கையினை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து கோவையில் உள்ள முக்கிய வணிக வளாகங்கள், கோவை குற்றாலம், ஆரம்பப் பள்ளிகள், புறநகர் பகுதியில் உள்ள திரையரங்குகள் ஆகியவற்றிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி பல்வேறு பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...