கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சுந்தராபுரம் நகர செயலாளரை தாக்கிய வழக்கில் போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சுந்தராபுரம் நகர செயலாளரை தாக்கிய வழக்கில் போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் 11ம் தேதி கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள மரச்செக்கு எண்ணெய் கடையினுள் வேலை செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் சுந்தராபுரம் நகர செயலாளர் சூரியபிரகாஷை தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் இரும்பு ராடை கொண்டு பலமாக தாக்கினர்.
இதில், பலத்த காயமடைந்த அவர் சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, படுகாயமடைந்த ஆர்.எஸ்.எஸ் சுந்தராபுரம் நகர செயலாளர் அளித்த புகாரின் பேரில், டி3 போத்தனூர் காவல் நிலைய கு.எண். 245/2020 ச/பி 447,448,294(பி), 307, 506(2) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், போத்தனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ப.மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு சந்தேகத்தின் பேரில் உக்கடம், ஜி.எம் நகரை சேர்ந்த அப்துல் கபூர் என்பவரின் மகனான முகமது ஹனிபா (41) என்பவனை பிடித்து விசாரித்த போது, அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் கூட்டு சதி செய்து இந்த குற்றச்செயலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை 120(பி), 447,448,294(பி), 307, 506(2) பிரிவுக்கு மாற்றம் செய்து தாக்குதலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமான TN 66 F 2210 என்ற எண்ணுள்ள Honda Unicorn வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளியை சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.