வால்பாறையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

கோவை: வால்பாறையில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை: வால்பாறையில் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நேசக்கரங்கள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவை முன்னிட்டு வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு பேரணியை துவக்கி வைத்தார். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் ஸ்டான்மோர் சந்திப்பு, காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம் வழியாக அண்ணா திடலை வந்தடைந்தது.



இதனை தொடர்ந்து அண்ணா திடலில் நடைபெற்ற விழாவிற்கு கோவை கோட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக வணிக மேலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். நேசக்கரங்கள் இயக்குநர் பால்நிலா, வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரையாற்றினர். முன்னதாக இயக்குநர் நேசக்கரங்கள் நேசமணி பால்நிலா வரவேற்றார்.



தொடர்ந்து சக்தி கலைக்குழுவினரின் கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், வேடராட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், வால்பாறை மகளிர் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேசக்கரங்கள் இயக்குநர்கள் நேசமணி பால் நிலா.முதல்வர் முரளீதரன், எல்.ஜ.சி கோவை கோட்ட வணிக மேலாளர் பன்னீர் செல்வம், துணை மேலாளர் பாரதி, மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ், வழக்கறிஞர் பால்பாண்டி, வீரமணி உட்பட ஏராளமான மகளிர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...