கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடல் பருமன் குறித்த சிறப்பு ஆலோசனை முகாம்

கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இன்றைய மாற்றம் நிறைந்த உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உடல் பருமன். ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கமே இந்த உடல் பருமனுக்கு காரணமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



எனவே, இந்த உடல் பருமன் வராமல் இருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது வந்தால் எப்படி பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனையுடன் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உள்ள உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சைத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை முகாமில் தனிநபர்களின் உடல் வகைக் குறியீட்டின் அடிப்படையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, உடல் பருமன் நோயானது சர்க்கரை நோய், இருதய நோய் மற்றும் ஈரல் நோய் போன்ற நோய்களுக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது எனவும் முகாமில் கலந்து கொண்ட 60க்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனை முகாமை இத்துறையின் நிபுணர்களான டாக்டர் பாலமுருகன், டாக்டர் பரிமளா தேவி குமாரசாமி ஆகியோர் நடத்தினர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...