வாட்ஸ் அப் குழுக்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு; திமுக பொதுக்குழு உறுப்பினர் சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் வாட்ஸ் அப் குழுக்களில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரினை தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: கோவையில் வாட்ஸ் அப் குழுக்களில் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரினை தொடர்ந்து திமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் திமுக மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் முருகன். இவர் கோவையில் உள்ள பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த கவுதம் என்பவர் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை யடுத்து காவல் நிலையத்தில் வைத்து திமுக பொதுக்குழு உறுப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் அறிந்த திமுகவினர் ராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



விசாரணையின் இறுதியில் திமுக பிரமுகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



இதைத்தொடர்ந்து அமைச்சர் பற்றி அவதூறு தகவல்கள் அனுப்பப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் குழுவின் அட்மின்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...