கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் இரண்டு நபர்கள் அனுமதி

கோவை: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் மற்றும் மற்றொரு நபருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரது மாதிரிகள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர் மற்றும் மற்றொரு நபருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரது மாதிரிகள் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொடரும் அச்சகங்களால் அனைத்து விமான நிலையங்களும் ஸ்கிரீனிங் முறையில் கொரோனோ வைரஸ் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரியவந்தது.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். பின்னர் பள்ளிவாசல்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று ஈரோடு சென்றனர். இந்த நிலையில் அந்த ஏழு பேரில் ஒருவரான டான் ரோசாக் (40) என்பவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து உடனிருந்தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப கோவை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனையின் போது அவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இங்கு இவரது இரத்தம் மற்றும் சலி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல, 27 வயது மதிப்புள்ள மற்றொரு நபரும் கொரோனோ அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...