கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக இந்து இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக எல். முருகன் பதவியேற்றபின் முதன் முறையாக கோவைக்கு வருகைபுரிந்தார். அவருக்கு கோவை மாவட்ட பாஜக கட்சியினர் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில தினங்களாக இந்து இயக்கங்களின் மீது பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுவருவதாகவும், கோவையில் இந்து இயக்கங்களை சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் தீவிரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இந்த வன்முறை தாக்குதல் சம்பவங்களில் ஒரு சிலரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் கோவையில் அமைதி நிலவவேண்டும் எனவும் அதற்கு தீவிரவாத இயக்கங்களை முதலில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்து இயக்கங்களின் மீது வன்முறை தாக்குதல் தொடர்ந்து நடக்கின்ற நிலையில் இதனை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனையை காவல்துறையினர் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழகத்தில் பாஜக கட்சியினை வளர்க்க தொய்வின்றி பணி செய்துவருவதாக கூறிய அவர், பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது எனவும், அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பாஜகவின் முக்கியமான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.