கோவை: கோவை சூலூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி குடும்பச் சண்டை காரணமாக பெண் ஒருவர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூரையடுத்த காங்கேயம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள் (80). இவர் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் பணி செய்து வருகிறார். இவரது உறவினர் சகுந்தலா (55). இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலையும் இருவரும் வீதியில் இறங்கி மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இந்த சண்டை காரணமாக கொதித்துப்போன மூதாட்டி ராமாத்தாள், பாத்திரங்களுக்கு ஈயம் பூச பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து சகுந்தலாவின் முகத்தில் ஊற்றினார்.
இதையடுத்து, ஆசிட் பட்டு அலறித்துடித்த சகுந்தலாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமாத்தாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.