ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கோவை வழியாக கடத்திவரப்பட்ட 52 கிலோ கஞ்சா பறிமுதல்‌; 3 பேர் கைது

கோவை: ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கோவை வழியாக கேரளா மற்றும்‌ தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கடத்திவரப்பட்ட 52 கிலோ கஞ்சாவை பறிமுதல்‌ செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கோவை வழியாக கேரளா மற்றும்‌ தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக கடத்திவரப்பட்ட 52 கிலோ கஞ்சாவை பறிமுதல்‌ செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை வழியாக பிற மாநிலங்களுக்கு ரயில்களில்‌ கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி கோவை போதைப் பொருள்‌ தடுப்பு பிரிவு காவல்‌ துணை கண்காணிப்பாளர்‌ வின்சென்ட்‌ தலைமையில்‌ ஆய்வாளர்‌ சரவணன்‌ மற்றும்‌ போலீசார் ரயில்‌ நிலைய பகுதிகளில்‌ சோதனை மேற்கொண்டனர்.



கோவையில் போலீசார் மேற்கொண்ட இந்த சோதனையின் போது, கடந்த இரு நாட்களில்‌ மட்டும் 52 கிலோ கஞ்சா பறிமுதல்‌ செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தேனி மாவட்டம்‌ மயிலாடும்பாறையை சேர்ந்த சிலம்பரசன்‌ (34), தேவரத்தை சேர்ந்த பிரபாகரன்‌ (36) மற்றும்‌ சிங்கராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகன்‌ (24), ஆகிய மூவரையும்‌ கைது செய்தனர்.

விசாரணையில் இவர்கள்‌ ஆந்திராவிலிருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கோவை வழியாக கேரளா மற்றும்‌ தமிழ்நாட்டில்‌ பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும்‌ சிறையில் அடைத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...