வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இளம் ராணுவ வீரர்களின் சத்திய பிரமாணம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி

நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 350 இளம் ராணுவ வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 350 இளம் ராணுவ வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர்.

இந்நிலையில், 46 வாரங்கள் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள் 350 பேர் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் எல்லையில் பணிபுரிய இன்று அனுப்பிவைக்கப்பட்டனர். 



இவர்களுக்கான சத்திரியப்பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது. பயிற்சி முடிந்து செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது உப்பு உட்கொண்டு சத்திரியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.



பின்னர் ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் நிகழ்த்திய கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. பயிற்சி வீரர்களின் கம்பீரமான அனுப்பி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, பிரிகேடியர் இராஜேஸ்வர் சிங் 5 சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

அதேபோல, தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாய் அணிவகுத்து வந்த காட்சியை கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர். பயிற்சியை முடித்த 350 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...