காசநோய் நோயாளிகள் குறித்து அதிகளவில் தகவலளித்த பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரிக்கு தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட விருது!

கோவை: கோவையில் காசநோய் தொடர்பான வழக்குகள் குறித்து அதிக அளவில் தகவல் தெரிவித்ததற்காக பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி சுவாசத் துறை பேராசிரியர் டாக்டர் அனுபமா மூர்த்திக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு..ராசாமணி விருது வழங்கி கௌரவித்தார்.


கோவை: கோவையில் காசநோய் தொடர்பான வழக்குகள் குறித்து அதிக அளவில் தகவல் தெரிவித்ததற்காக பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி சுவாசத் துறை பேராசிரியர் டாக்டர் அனுபமா மூர்த்திக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி விருது வழங்கி கௌரவித்தார்.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் வரும் 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கு 'எண்ட் காசநோய்' (End TB) என்ற பதாகையின் கீழ், காசநோய் நோயாளிகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும் ஒரு முயற்சியை தொடங்கினர்.

நாட்டில் 4.2 லட்சத்திற்கும் அதிகமான காசநோய் வழக்குகள் உள்ளன. இது உலக காசநோய் நோயாளிகளில் 27% ஆகும். இந்த விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில், அரசு சார்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், காசநோய் நோயாளிகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தியாவில் காசநோய் நோயாளிகளில் 70% பொதுத்துறை மற்றும் 30% தனியார் துறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 30% காசநோய் வழக்குகளில், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குறித்து தகவல் அளித்ததில் முதலிடத்தில் உள்ளது. பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் இந்த முயற்சியை அங்கீகரிக்க, தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட விருது டாக்டர் அனுபமா மூர்த்திக்கு வழங்கப்பட்டது.



இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அனுபமா மூர்த்தி, “காசநோயை ஒழிக்க பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும், மேலும் நகரில் 100 சதவீதத்திற்கும் அதிகமான காசநோய் வழக்குகளை அறிவித்துள்ளதாகவும், இது 2025ம் ஆண்டுக்குள் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தினை முடிப்பதற்கு உதவக்கூடும் என்றார்.



மேலும், பிஎஸ்ஜி ஊழியர்கள் மற்றும் பொது பயிற்சியாளர்கள் மூலம் நகரில் காசநோய் குறித்து விழிப்புணர்வு திட்டத்தை ஏற்பாடு செய்து வருவதாகவும் இந்த நோயைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...