சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வரி மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திண்டாடி வரும் நிலையில், இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட பெரிதும் துணை புரியும்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, பேரல் ஒன்று 36 டாலராகச் சரிந்தது. இந்த விலை வீழ்ச்சி கடந்த 2004-ம் ஆண்டுக்கு இணையாக வந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8 வரை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டர் ரூ.69.87க்கும், டீசல் ரூ.62.58க்கும் விற்கப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17.98, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.13.83 என உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.