திருப்பூர்: தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழக அரசுக்கு நன்றி கூறி போராட்டத்தை கைவிடுவோம் என திருப்பூரில் 28ம் நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அறிவொளி சாலையில் 28வது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பின் தலைவர் அல்தாபி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மக்கள் தொகை பதிவேட்டை பழைய நடைமுறையோடு அமல்படுத்த வேண்டும் எனவும் என்பிஆர் முறையில் அமல்படுத்த கூடாது எனவும், அமைச்சர் உதயகுமார் NPR முறை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தால் போராட்டத்தை கைவிட்டு இருப்போம் ஆனால், நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அனைத்து இஸ்லாமிய தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றினால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து போராட்டத்தை கைவிடுவோம் எனவும் தெரிவித்தார்.