கோவையில் இந்து முன்னணி மற்றும் எஸ்.டி.பி.ஐ., பிரமுகர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: தாக்குதல்களில் ஈடுபட்டோர் கைது

கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அடுத்தடுத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் இவ்விரு சம்பவத்தில் ஈடுபட்டோரையும், போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அடுத்தடுத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் இவ்விரு சம்பவத்தில் ஈடுபட்டோரையும், போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கடந்த வாரம் இந்துப்முன்னணி மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் நஞ்சுண்டாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கோவை ராம்நகரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் இக்பால் என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி சென்றனர்.

அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இச்சம்பங்களால் கோவை மாநகரம் அசாதாரண சூழலுக்கு சென்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

கைது நடவடிக்கைகள்: 

இந்து முன்னணி ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூர்முகம்மது என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று அசாரூதின் என்பவரை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோல, எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த இக்பால் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இந்து முன்னணியை சேர்ந்த சதீஸ் கண்ணன் (23) மற்றும் ராகுல் (23) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு 

தொடரும் இரு தரப்பினரின் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கோவை மாநகரம் முழுவதும் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும், இரவு பகல் என துப்பாக்கி ஏந்திய போலீசாரும் தீவிர ரோந்து பணியில் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, ஆங்காங்கே ஏற்படும் பரபரப்புகளை சமாளிக்க மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தலைமையில் இரவு நேரங்களில் சம்பவ இடங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சுமூக நிலை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.

மேலும், கோவையில் மத ரீதியான தாக்குதல்கள் இனி நடைபெற்றால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...