கொரோனா அச்சத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொரோனா அச்சத்தால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் பிரிகேஜி, எல்.கேஜி மற்றும் யுகேஜி ஆகிய மழலையர் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே கேரள எல்லையை ஓட்டியுள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழலையர் பள்ளிகள் முதல் 5 ஆம் வகுப்பு வரை மார்ச் 16 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பினை முதன்மை மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...