கோவை: கேரளாவில் கொரானா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியாக வால்பாறை கேரள எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணையை ஒட்டியுள்ள பகுதியான கேரள மாநிலத்தின் மழுக்கப்பாறை உள்ளது. இந்த சாலை வழியாக வால்பாறையிலிருந்து கேரள மாநிலத்தின் கொச்சின் ஏல மையத்திற்கு தேயிலை தூள் லாரிகள் உட்பட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் கொரானா மற்றும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வால்பாறை வட்டார மருத்துவ அலுவலர் பாபுலக்ஷ்மன் தலைமையிலான குழுவினரால் மழுக்கப்பாறை தமிழக வனத்துறை சோதனைச்சாவடியில் வந்து செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக, வாகனங்கள் மீது கிருமி நாசினி அடிக்கப்படுகிறது.

மேலும், வாகனங்களில் வருபவர்களிடம் கொரானா வைரஸ் பற்றியும் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பழைய வால்பாறை துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களுக்கு கொரானா வைரஸ் பற்றியும் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.