திருப்பூரில் சினிமா டிக்கெட்டுகளை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த நடிகர் உட்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருப்பூர்: திருப்பூரில் சினிமா டிக்கெட்டுகளை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த திரைப்பட நடிகர் உள்ளிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் சினிமா டிக்கெட்டுகளை கொடுத்து ரூ.6 லட்சம் மோசடி செய்த திரைப்பட நடிகர் உள்ளிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.



திருப்பூர் கொங்கு மெயின் ரோடு குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(57). எலக்ட்ரீசியனாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்த ஜெகஜீவன்ராம் என்பவர் பழக்கமாகியுள்ளார். அவர், கோவிந்தராஜிடம் வயதான காலத்தில் ஏன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து கஷ்டப்படுகிறீர்கள். உங்களை சினிமா துறைக்கு அழைத்துச் சென்று நிறைய வருமானம் பெற வழி வகை செய்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பிரபல நடிகர் ராதாகிருஷ்ணன் வைகை எக்ஸ்பிரஸ் என்ற தமிழ் திரைப்படத்தை தயாரிப்பதாக சென்னைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைப்பதாகவும் ஜெகஜீவன்ராம் கூறியுள்ளார்.

பின்னர் கடந்த 01.03.2016ம் தேதி சென்னை கே.கே.சாலை சாலிகிராமம் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த பிரபல நடிகர் ராதாகிருஷ்ணன் கோவிந்தராஜிடம் நான் தயாரிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் என்ற சினிமா கூப்பன்களை ஜெகஜீவன்ராம் வசம் ஒரு கூப்பன் ரூ.1000 வீதம் 600 கூப்பன் தந்து விடுகிறேன். அவரிடம் அந்த கூப்பன்களை வாங்கி படம் வெளியாகும் சமயத்தில் ரூ.1500க்கு தாராளமாக விற்பனை செய்யலாம் என கூறியுள்ளார்.



இதனை தொடர்ந்து 02.04.2016 அன்று அவிநாசியில் ஜெகஜீவன்ராமிடம் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கான 600 டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு வெளியில் கடன் வாங்கி ரூ.6 லட்சம் பணத்தை ஜெகஜீவன்ராமிடன் கொடுத்துள்ளார். பின்னர், பல நாட்கள் கடந்து படம் வெளியாகாததால் ஜெகஜீவன்ராமிடம் பணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் 24.03.2017 ம் ஆண்டு திருப்பூரில் உள்ள சில திரையரங்குகளில் படம் வெளியாகும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக அந்த டிக்கெட் எதுவும் விற்பனையாகவில்லை. அந்த படத்திற்கான டிக்கெட் குறித்து அவரிடம் கேட்டதற்கு டிக்கெட் செல்லாது என கூறியுள்ளார். இந்நிலையில், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் தன்னிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.6 லட்சம் ஏமாற்றிய நடிகர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெகஜீவன்ராம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...